tamilnadu

img

பசுவுக்கு சவ ஊர்வலம்...150 பேர் மீது போலீஸ் வழக்கு

லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகிலுள்ள மெம்தி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகப் பசு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

ஊரடங்கில் மனிதர்களுக்கே உணவு கிடைக்காத நிலையில், அந்த பசுவை வளர்த்தவர், எதன் காரணத்தாலோ அந்த பசுவை வீட்டைவிட்டு விரட்டியடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைவீதியில் சுற்றித்திரிந்த பசு, சில நாட்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டது.இதனைப் பார்த்த, மளிகைக் கடை உரிமையாளர் தினேஷ் உள்ளிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த பசுவை ‘நல்லடக்கம்’ செய்ய முடிவுசெய்து, பசுவின் உடலை,  ஊர்வலமாகஎடுத்துச் சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். சிலர் இதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் இறந்தாலே 20 பேருக்கு மேல் கூடக் கூடாதுஎன்று தடை விதிக்கப்பட் டுள்ள நிலையில், பசு-வுக்குப்பாடை கட்டி ஊர்வலம் நடத்திய விவகாரமானது.இதையடுத்து, மெம்தி கிராமத்தைச் சேர்ந்த 150 பேர்மீது அலிகார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

;